Saturday, July 5, 2008

புகைப்படமும் நானும்

பார்க்கத் தூண்டியது
பார்த்தல் விடுபட மறுக்கிறது
இடையில் யாரேனும்
தடைசெய்தால் கோபம்
தலைக்கு ஏறுகிறது
பார்த்துக்கொண்டே இருக்கத்
தூண்டுகிறது
கவனம் மனதில்
பார்த்துவிடாமல் இருக்க
என்னை
பார்க்கிறேன் ஓர் உருவம்
கால்மேல் கால் போட்டுக்கொண்டு
கண்ணாடி அணிந்து
தலைமுடியும் தாடியும் நரைத்து
வெற்றிலை வாயுடன்
அசைபோடுகிறது வாழ்க்கையை
பார்க்கத் தூண்டுகிறது
கவனம் மனதில்
பார்த்துவிடாமல் இருக்க
என்னை
***************

மனதில் குதியாட்டம்
மனிதனின் ஆரம்பத்தைக்கண்டு
தொட்டு உணர
கண்களோடு பேசி மகிழ
பதிலில்லாத எத்தனையோ கேள்விகளை
மகிழ்வோடு கேட்டு ரசிக்க
விரல்களின் தீண்டலை வேண்டி
தவம் இருக்க
கைசூம்பி கலங்கமட்று இருக்கும்
பரிசுத்தக் கடலை
அள்ளிப் பருக
மனதில் குதியாட்டம்
மனிதனின் ஆரம்பத்தைக்கண்டு
****************


அருமை

உதடுகளுக்காக காத்திருக்கின்றன
முத்தங்கள்
அனுபவத்திற்காக காத்திருக்கின்றன
உதடுகள்
வாழ்க்கைக்காக கத்திருக்கன்றன
அனுபவம்
அருமையான மனிதத்துக்காக
காத்திருக்கின்றது வாழ்க்கை
அனைத்தும் காத்திருக்கின்றன
மனிதனுக்காக

Monday, June 16, 2008

நோக்கு

அழகாய்தான் பார்த்தாய்
ஆடிபோனது மனது
வேகமாக
ஒளிந்துக்கொண்டேன் என்னுள்
பாதுகாப்பாக.

அவசரம்
தளிர்களுக்கு இலையாக
மொட்டுகளுக்கு மலர்ந்துவிட
பூக்களுக்கு காயாக
காய்களுக்கு பழமாக
இவைகள் ஒன்றும் தெரிவதில்லை
ஆகிவிட்டால்
அழிந்துவிடுவோம் என்று.

கவிதை

மெய்ப்பொருள்

கோடை காலத்தின் தொடக்கம்
மரங்களின் இலைகள்
மஞ்சலும் பச்சையுமாய்

தனக்கும் மரத்திற்குமான் உறவை
காற்று துண்டிதத்னால்
எப்போதும் முறையிடும்
காற்றோடு சருகுகள் .

இப்போது மலர்களை காணவில்லை
பச்சை இலைகளுக்கு இடையே
வெள்ளை நிலவுகளாக
நிறைந்திருக்கும் மரமெங்கும்.

இப்போது காய்களும் தென்படுவதில்லை
இலையின் நிறத்தை வாங்கிக் கொண்டது
தேடித்தான் பார்க்க வேண்டும் சிவனைப் போல.

மரமனைத்தும் இலைகளோடு
சிகப்பு விளக்குகள் . பழங்கள்.
தூரத்துக் காட்சி மனதை மயக்குகிறது.

காற்றில் விழுந்தா பழங்களை
ஆசையோடு எடுக்கையில் இருந்த
மலர்ச்சி அருகில் பார்த்ததும் அனாதியானது.

அங்கோ காண விழுந்தது
மனதை விட்டு அகலவில்லை
பழமும் அதன் ஒவ்வாமையும்.




Sunday, June 15, 2008

சி.சு.செல்லப்பா- வாழ்வும் படைப்பும்

நாவல்
கவிதை
சிறுகதை
கட்டுரை
எழுத்து பத்திரிகை
எழுத்து பிரசுரம்
நவின விமர்சனம்
******
தமிழ் இலக்கிய வானில் துருவ நட்சத்திரம் : சி.சு.செல்லப்பா

Tuesday, June 10, 2008

தொலைந்துபோனவன்

தொலைத்த ஒன்றை தேடி
தொலைந்து போனேன்
தேடுதலின் தோல்வியில்
மிருகமாய் நான்!